Friday, 20 November 2009

தமிழினத்தலைவன் தேசியத்தலைவனானதால் வந்த வினை ?



எமது தலைவன் மாறிவிட்டான்,அவனை மாற்றியது காலமா இல்லை காங்கிரஸா, அதை பற்றி நான் இங்கு எழுத போவதில்லை. துக்ளக் சோ, ஜெ இவர்கள் எல்லாம் விடுதலைபுலிகளை பயங்கரவாத இயக்கம் என குற்றம் சாட்டிய போது அவர்களை எதிர்த்து எம் தலைவன் இட்ட அறிக்கைகள் எராளம். இன்றோ இலங்கை தமிழனின் இன்றைய இழிநிலைக்கு காரணம் பிரபாகரனும் அவனின் விடுதலைபுலிகளின் இயக்கமே என்பதை தெள்ள தெளிவாக, சமநிலையோடு ஆய்வு செய்து அறிவித்து விட்டான்.

எம் தலைவன் ஈழ தமிழனின் துயர் துடைக்க அறப்போராட்டங்களான சாலைமறியல்,ரயில் மறியல்,பந்த் போன்றவற்றை நடத்தியுள்ளான் ஆனால் அவற்றை மெச்ச யாருமில்லை. ‘டெசோ’ என்ற இயக்கத்தை உருவாக்கி, அதில் அனைத்து போராளி குழுக்களை இணைத்து அதற்கு தலைமையேற்று, ஈழ தமிழனின் வாழ்வு மலர அரும்பாடு பட்டபோது, வெண்ணைய் திரண்டு வரும்போழ்து தாழி உடைந்த கதையாக பிரபாகரனும் அவனின் விடுதலைபுலிகளின் இயக்கம், சக போராளி குழுக்களை அழித்து இலங்கை அரசுக்கு மறைமுகமாக பேருதவி செய்தது. இதை எம் தலைவன் குறிப்பிட்ட போது நெடுமாறன் போன்ற புல்ருவிகள் கூக்குரலிடுகின்றனர்.


அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி, இலங்கைக்கு இந்திய அமைதி படையினை அனுப்பி ஈழ தமிழனை வதைத்த போது அவன் செய்த ஆர்பாட்டங்களை சொல்லி மாளாது. புலிகளுக்கும், இந்திய படைக்கும் போர் முண்ட போது தமிழன் என்ற உணர்வினால் புலிகளை ஆதரித்தான். அதே புலிகள், தமிழக மண்ணில் ராஜிவ் காந்தியை படுகொலை செய்த போது எமது தலைவன் தான் முதலில் ஓரு இந்தியன் பின்னர் தமிழன் என்பதனை உணர்ந்தான்.


தன்னை கொல்ல சதி நடக்கிறது என்றும் அதன் காரணமாக வைகோ-வை கட்சியிலிருந்து நீக்கினான் ( பின்னர் கூட்டணியில் சேர்த்தது வேறு விஷயம் ). இது எம் தலைவனுக்கு புலிகளின் மேலிருந்த அபிமானத்தை மாற்றியது, இதை நிங்களும் ஆமோதித்தால் நான் அதற்கு உடன் படுகிறேன்??!!

ஜனநாயகம் என்றால் என்னவன்று கேட்கும் புலிகளுக்கு, தமது கட்சியில் ஜனநாயகம் எப்படி செயல்படுகிறது என்பதை உதாரணத்தோடு விளக்கியதை யாரும் மறக்க முடியாது. ஓரு நிரூபர் தங்கள் மகனை கட்சியில் உங்கள் வாரிசாக நியமிக்க போவதாக பேச்சு அடிபடுகிறதே என்று கேட்க, அதற்கு எம் தலைவன், ‘ தி.மு.க என்ன காஞ்சி சங்கர மடமா வாரிசினை நியமிக்க என கோபபட்டான்’ ஆனால் இன்றோ, தன் மகனை துணை முதல்வராக்கி அழகு பார்கின்றான் இது வேறு கதை.

மாத்தையா, அன்பழகன் போன்று எம் தலைவனுக்கு கட்டு பட்டவன் இல்லை, இதை அறியாத எம் தலைவன், பிரபாகரன் தனக்கு தெரிந்த ஜனநாயக முறைபடி மாத்தையா மற்றும் ஏனைய தலைவர்களின் கதையை முடித்ததை குறை கூறுவதை பிறர் ஏற்காமல் நகைப்பது அழகல்ல.

பிரபாகரனின் சர்வாதிகார போக்கினால் புலிகளின் இயக்கத்தில் பிளவு ஏற்கபட்டது, இதை பயன்படுத்தி இலங்கை அரசு புலிகளை இந்திய அரசின் உதவியுடன் அழித்தது. பிரபாகரன் தான் அழிந்தது மாத்திரம் அல்லாது இலங்கை தமிழனின் வாழ்க்கையினையும் சேர்த்து அழித்ததை யாரலும் மறுக்க முடியாது.

அன்று பிரபாகரனிடமிருந்து கற்ற பாடத்தினால் எம் தமிழினத்தலைவன் இன்று அடிமைபட்டு, சிறுமைபட்டு கிடக்கும் ஈழ தமிழனின் இழி நிலையினை கண்டு மவுனமாக தனக்குள் அழுகின்றான். உலக தமிழினமே உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் எம் தலைவனின் மன வலியினை இலங்கை தமிழனின் வாழ்க்கை போன்று கேலிக்குரியதாக்காதிகர்கள்.

Thursday, 27 August 2009

இவன் வெள்ளக்காரியை இழுத்துக்கினு வந்திடுவான் பாரு.

..



இது தெரு முனையிலே பசங்களோட நின்னுகின்னு திருட்டு தம்மடிக்குது பாரு,எங்கே உருப்பட போகுது- நம்ப காதுபட தெரு பெருசுங்க பேசிச்சுங்கபா











நான் பாஸ் மெரிட்ல அதுவும் கோல்ட் மெடல் என்றவுடன் பெருசுங்க நம்ப முடியாமல், ‘இது பிட் அடித்து பாஸ் ஆயிருக்கும்’ என்று தங்களை தாங்களே தேத்தி கொண்டதுங்கப்பா



.......அதே பெருசுங்க எனக்கு படித்து முடித்தவுடனே கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி வேலை கிடைத்தவுடனே, ‘அவனுக்கு அதிர்ஷ்டம்’என பெருமுச்சுவிட்டதுங்ப்பா.


இதே பெருசுங்க, என்னப்பா எப்போ வெளிநாடு போக போறே என கேட்டுச்சுங்கப்பா, TRY பண்ணி கொண்டிருக்கேன் என்று சொன்னவுடன்,இவனுக்கல்லாம் வெளிநாட்டு வேலை எங்கே கிடைக்க போறது என்று என் முதுகு பின்னால் முணுமுணுக்குதுங்கப்பா.


திரும்பவும் இதே பெருசுங்க,எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தவுடன், ‘வெளிநாடு போறான் இவன்’ அங்கிருந்து ஓரு ‘வெள்ளக்காரியை இழுத்துக்கினு வந்திடுவான் பாரு’ என சொல்லுதுங்கப்பா

இந்த மாதிரி பெருசுங்களை என்ன செய்வது, எனக்கு ஓன்னுமே புரியல்லைப்பா, உங்களூக்காவது எதாவது தோணுதா.

Wednesday, 26 August 2009

சமஸ்கிரூதம் பிரமணர்களின் மொழியல்ல ?




  • இது அப்பா டக்கரின் கண்டுபிடிப்பல்ல
    அனனவருக்கும் தெரிந்தது தான். இதை நான் ஏன் சொல்ல வருகிறேன் என்றால் நம்மில் பலர் (சில பதிவர்களும்) சமஸ்கிரூதம் கற்றதினால் தாம் மற்றவர்களை விட மேலானவர்கள் என நினனக்கிறார்கள்.


பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஓர் இனத்தினரால் பேசபட்ட மொழி சமஸ்கிரூதம். வியாசர், வால்மிகி,காளிதாசன் ஆகியோர் பிரமணர்கள் அல்ல ஆனால் அவர்கள் சமஸ்கிரூதத்தில் பேசி மற்றும் எழுதியுள்ளனர். ஏன் இராமர்,கிருஷ்ணர், பாண்டவார்கள்,பிஷ்மர்,கர்ணனை வளர்த்த தேரோட்டி வரை சமஸ்கிரூதத்தில் பேசியதாக அறிகிறோம்.




  • தற்கால பிரமணர்கள் சமஸ்கிரூதத்தை தேவமொழி, பிரமணமொழி என்று ஏன் சொல்லுகிறார்கள் என புரியவில்லை.கோவிலில்,கல்யாணத்தில், சமஸ்கிரூத மந்திரம் சொல்லும் பிரமணனுக்கு அம்தமந்திரத்தின் பொருளும், சரியான உச்சரிப்பும் தெரியவில்லை என்பதே உண்மை.



எனது பிரமண நன்பனின் விட்டிற்க்கு ஓரு நாள் சென்றேன் அப்போது அவனின் தந்தை ஏதொ ஓரு சமஸ்கிரூத புத்தகத்தை விரித்து படித்து கொண்டு இரூந்தார். என்னை பார்த்து ‘ வாப்பா எப்படி இருக்கே’ என குசலம் விசாரித்தார். நானும் நல்ல இருக்கேன் மாமா, என்ன படிக்கிறிங்க என கேட்டேன். அதற்கு அவர் சாம வேதம்டா, இதை படித்தால் மனம்,புத்தி தெளிவாகும்,கெட்டது எதுவும் அண்டாது என்றார். மாமா, அர்த்தம் தெரிந்து தான் வேதம் படிக்கிறிர்களா என கேட்டேன்,டென்ஷன் ஆகிவிட்டார்...




  • பிறமொழி எழுத்துக்களை கொண்டூ தான் சமஸ்கிரூத வார்த்தைகளை படிக்க முடியும், அதனால் பிரமணர்கள் அதை தப்பாக உச்சரித்தாலும் நாம் அதை பற்றி கவலை படுவதில்லை. அதே சமயம் ஆங்கிலத்தை யாராவது தப்பாக உச்சரித்தால் மிக்க வேதனை படுகிறோம்.சமஸ்கிரூத மந்திரத்தை உயர்சாதியினர் அல்லதேரர் கேட்டால் அவர்களை அக்குவேறு,ஆணிவேறாக பியக்க சொல்லுகிறது ஓரு வேதம். இதற்கான அர்த்தம், அக்கால தாழ்குலத்தினருக்கு சமஸ்கிரூதம் புரியும் அல்லது சமஸ்கிரூத மொழியில் அவர்களும் பேசினார்கள் என தான் எடுத்து கொள்ள வேண்டியிருக்கிறது.


சமஸ்கிரூதம் பலதரபட்ட மக்களால் பேசப்பட்ட மொழியே அன்றி பிரமணர்களின் அல்லது ஏனைய உயர்சாதியினரின் அல்லது தேவர்களின் மொழி அல்ல தமிழ், ஆங்கிலம் போல் அதுவும் ஓன்று. எப்படி ஆங்கிலம் நம்மிடையே உட்புகுந்து தமிழை மெல்ல ஓரம் கட்டுகிறதோ அதே போன்று பிறமொழி ஆதிகத்தினால் சமஸ்கிரூதம் அழிந்து தற்போது கடவுளின் உருவச்சிலை முன்னால் உச்சரிக்கும் மொழியாகிவிட்டது.




  • தி.க.வினர் தான் சமஸ்கிரூதத்தை பிரமணர்களின் மொழியாக்கியது அதை பிரமணர்களூம் விடபிடியாக பிடித்து கொண்டு விட்டனர்.


Friday, 26 June 2009

கழக பொற்கால ஆட்சியில் புதியதாக 2000 ஆசிரியர் - அதன் தேர்விற்கான மாதிரி வினாத்தாள்



கழக பொற்கால ஆட்சியில் புதியதாக 2000 ஆசிரியர்கள் நியமிக்க போவதாக அறிவித்துள்ளார்கள். அதன் தேர்விற்கான மாதிரி வினாத்தாளினை தயாரித்துள்ளேன். இது தேர்விற்காக தங்களை தயார் செய்து கொள்ளுகின்றவாசகர்களூக்கு பேரூதவியாக இருக்கும் என நம்புகிறேன்.













பகுதி 1. கிழ்கண்டவற்றுக்கு சரியான விடையை (x) செய்க

தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் இவர்களில் யார்?
1. திரு.மு.க.ஸ்டாலின். 2. திரூ.கருணாநிதி. 3. திரு.மு.க.அழகிரி.

இந்தியாவின் பிரதம மந்திரி இவர்களில் யார் ?
1. திருமதி.சோனியா. 2.திரு.ராகுல். 3.திரு.மன்மோகன்சிங்.

சிறந்த காமடியன் இவர்களில் யார்?
1. எஸ்.வி.சேகர். 2.சுப்பிரமணியசாமி. 3.பொதுஜனம்.

புலிகளின் அழிவால்அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களில் யார்?
1.வைகோ 2.பழ.நெடுமாறன். 3.திருமாவளவன்.

சேது சமுத்திர திட்டம் எப்போழது முடிவுறும்.?
1.இவ்வருடம் 2. கி.பி.2100 3. ராமருக்கு தெரியும்

குழப்புவதில் சிறந்தவர் யார்.?
1.சோ 2.ரஜினி 3. ஞாநி

மதுரையை ஆட்சி புரிவது யார்
1.மீனாட்சி 2.அழகிரி 3.யாருமில்லை


எம்.ஜி.யாரின் வாரிசு இவர்களில் யார் ?
1. ஜெ 2.விஜயகாந்த 3.சத்தியராஜ்




பகுதி 2. கோடிட்ட இடத்தை நிரப்புக.

தமிழகத்தில் இது இலவசமாக__________கிடைக்காது.
1. கலர்டிவி 2.காஸ் அடுப்பு 3.கல்வி

கோடநாடு எஸ்டேட்_________உள்ளது.
1.ஐதராபாத்ல் 2.ஊட்டியில் 3.ஏற்காட்டில்

சமுகநிதி காத்த விராங்கனை என்ற பட்டம்____ல்____க்கு கொடுக்கபட்டது.
1.விரமணியா__ஜெ 2. கருணாநிதியா__கனிமொழி 3.ராமதாஸ்__குஷ்பு

பகுதி 3. சரியாக பொருத்துக

1. ஜெ 1. அன்னை
2. சோனியா 2. அம்மா
3. சசிக்லா 3 .புதுமைபெண்
4. கனிமொழி 4. சின்னமேடம்


1. கருணாநிதி 1. அய்யா
2. ராமதாஸ் 2. அய்யன்
3. பெரியார் 3. ஐயா

பகுதி 4. ஓரு பக்கம் மிகாமல் கட்டுரை வரைக

1. லட்சிய தி.மு.க, ச.ம.க. தே.தி.மு.க. கூட்டணி அமைத்தால் எப்படி இருக்கும் என்பதை பற்றி கட்டுரை வரைக.

2. சங்கம் வளர்த்த பாண்டியன்,சங்கமம் கனிமொழி இருவரையும் ஓப்பிட்டு கட்டுரை வரைக.


3. அ. காமாராஜ் ஆட்சி என்றால் என்ன
ஆ. அறிவு இயக்கம் என்றால் என்ன?

Friday, 22 May 2009

அருகி போன சித்தாந்தங்கள் - இராமானுசர் & சங்கரர்.(1)

மக்களிடையே குழப்பமும்,தெளிவின்மையும் இருக்கும் பொழுதும்,அராஜகம் தலைவிரித்து ஆடும் பொழூதும் புரட்சிகரமான கருத்துக்களை சொல்லி விழிப்புணர்வை எற்படுத்துவர்கள் அரசியல் எனில் தலைவராகிறர்கள், சமயம் எனில் குரு ஆகிறார்கள்.

சிலரின் தத்துவங்கள் அதன் நடைமுறைகள் காலபோக்கில் பின்பற்றுபவர்கள் இல்லாமல் சுவடழிந்து போகிறது அச்சிலரின் தத்துவங்களையும், நடைமுறைகளையும் நாளிடைவையில் அதனை பின்பற்றுபவர்கள் பலர் அதில் உள்ள கடுமையான சட்டதிட்டங்களால் கைவிடுகிறார்கள். அதனால் அத்சித்தாந்தங்களூம் அதனை பின்பற்றுபவர்களும் அருகி போகிறார்கள்.

சங்கரர் வகுத்த பாதையை திருநிறு அணிந்த பார்பனனும், இராமானுசர் வகுத்த பாதையை நாமம் அணிந்த பார்பனனும்,அவரால் அரவணைத்து பட்ட சில உயர் சாதியீனரும் தற்போது பின்பற்றுகிறார்கள், பஞ்சமர்கள் தற்போது எனக்கு தெரிந்து இல்லை.

இந்திய துணைக்கண்டம் பல சிற்றரசுகளூம்,பேரசுகளூம் உள்ளடக்கிய நாடாக இருந்தது. சங்கரர் இமயமலை வரை உள்ள பல்வேறு நாடுகளூக்கு சென்று பல குருக்களை வாதிட்டு வென்று,மடங்களை ஸ்தாபித்து அத்வைத நெறியை பரப்பியதால் அவரை திருநிறு அணிந்த பார்பனர்கள் ஜெகத்குரு என போற்றி வணங்குகிறார்கள்.
இராமானுசர் வடக்குவரை சென்றார் ஆனால் ஏனோ சங்கரர் அளவிற்க்கு செயல்படவில்லை. அதனால் நாமம் அணிந்த பார்பனனும்,அவரால் அரவணைத்து பட்ட சில உயர் சாதியீனரும் அவரை ஜெகத்குரு என அழைக்கவில்லை.
இவர்களின் சித்தாந்தங்கள் ஏன் கால போக்கில் அருகின? ஏன் இவ்நவின உலகில் தற்சமயம் சிலரால் மட்டும் போற்றபடுகின்றன.....(தொடரும்)...

Monday, 18 May 2009

Acharya Kannabiran(madhavipanthal) and a RED NECK (me)

For the bloggers "who are intrested to know the contents of the removed comment from madhavipanthal"
Thanks very much for your lovely comments and explanations. Mr. KRS
Acharya kannabiran:கு+ரு ன்னு எல்லாம் பண்டிதர்கள் போல பிரிக்கலாம்! பிரிக்கட்டுமா?கு-சப்த அந்தகாரஸ்யரு-சப்த தந்நிரோதஹஅஞ்ஞானம் என்னும் இருளை அகற்றுபவன் குரு!
RED NECK:I would like to be a student forever rather than being a pundit like you. I drowned in the ocean of literacy and gasping for breadth – rescue me saviour. In my humble opinion you are right – I have to learn English and Tamil thoroughly to match your half-baked wisdom.

Acharya kannabiran :Do u have selective amnesia? :)I said in the end..."Sankara & Ramanuja are definitely "Jagath Gurus"! "Jagath Gurus"! "Jagath Gurus"!"
REDNECK:The phrase “selective amnesia” was used by Dr.JJ from that day onwards it became very popular. I presume you are very tired after digging your mind, Thanks “quack doc” for your valuable diagnosis.
Acharya Kannabiran: நல்லாச் சிரிக்கிறீங்களே? எப்படிங்க இம்புட்டு அறிவாளித்தனமா பேச முடியுது? எல்லாம் நீங்க பெற்ற ஞானம் தான் போல! :)
REDNECK:I had a hearty laugh because your blog tickled my mind. You are a reincarnation of “King Solomon”, when I realised that my mind and wisdom glowed. I have to agree, in front of you, “ I am a red-neck”. Will you make me sagacious?
Acharya Kannabiran:உலகப் பிரசத்தி, ஜகத் பிரசத்தி பெற்றவர்கள் தான் ஜகத்குரு-ன்னு, ஹிட்லரைக் கூட ஜகத்குரு-ன்னு சொல்லீறலாம்
REDNECK:
Rajabukshe is annoyed, Are you amazed, millions of questions dashing in your mind? You have mentioned Hitler in your blog, so next time when you reply to someone comments – refer him please
Acharya Kannabiran:உலகப் பிரசத்தி, ஜகத் பிரசத்தி பெற்றவர்கள் தான் ஜகத்குரு-ன்னு, ஹிட்லரைக் கூட ஜகத்குரு-ன்னு சொல்லீறலாம்! :) மக்களை உலகத்துக்குப் பயன்படும் வண்ணம் வாழத் தொண்டு புரிந்தவர்கள் உலகாசான், ஜகத்குரு!
REDNECK:As per you “PERIYAR” is also a “JAGATGURU”.
Acharya Kannabiran:உலகாசான்களின் பெருமையை அவர்கள் மறைமொழியே காட்டி விடுது!உங்களின் "பெருமையை" உங்க லூசுத்தனமான வாய்மொழியே காட்டி விடுது! :))
REDNECK:Kids like me will ask silly questions. You are grown up – Acharya like you has to answer.
Acharya kannabiran:மொதல்ல நல்ல தமிழில், ஆங்கிலத்தில் எழுத முடியுதா-ன்னு பாருங்க! அப்பாலிக்கா உங்க ஜகத்குரு ஆராய்ச்சியை வச்சிக்கலாம்! உங்களின் அடுத்த பின்னூட்டத்தை மட்டுறுத்துவேன்!
REDNECK:My lord, This is my humble request, please consider my plea, I too want my name to get embedded in your blog history. I beg you, please don’t remove my comments.

Thank you, “your holiness - awesome blog”.

Saturday, 4 April 2009

காலேஜ கலட்டா 'i want கால் லிட்டர் stone"

அப்ப நாங்கோ படிக்கிறோ புள்ளைங்கோ. டாஷ்மாக் கிடையாது. கள்ளூகடை,சாராயக்கடைகள்,பிராந்தி கடைகள் நிறைந்த குடிமக்களீன் பொற்காலம். ப்போ ஓன்லி சீமைசரக்கு....எல்லாம் ஐ.டி. யெட மாய்மாலம்.
வெள்ளகாரன் போய்ட்டான் ஆனாலும் நம்ம விடலெ,இப்ப அரசெ சரக்கு விக்குது. சுதெசீ சரக்கான பட்டை,கள் எல்லாம் ban பண்ணிடாங்க. இத பீடிக்காத சிலர் இன்னும் அரசுக்கு போட்டியா காய்ச்சி விக்குறாங்க, ஆனா அந்த தீயாகிகளை பிடித்து jail ல்ல போட்டுறாங்கோ. இப்ப கூட கள்ளூகடை திறக்க கோரீ சத்யாகிரகம் நடக்குது.......
சரி matter க்கு வரோன். மச்சான்,கள்ளு குடிக்க போலாமா எல்லாரும் கேட்டான் கரியன். சரி மச்சி, எங்க போறது,அதற்க்கு காரோட்டி சொன்னான். நாமோ கஷ்பாக்கு போலாம் அங்கே நம்ம சகி பாய் கடையில் ‘மருந்தில்லாமல் pure கள்ளு கிடைக்கும்’.
எல்லாரும் சரின்னு பொடி நடையா நடந்து கள்ளுகடைக்கு போய் சேர்ந்தோம். ஆன் த வோ ல்ல, தம்,ஷைட்டிஷ் எல்லாம் வாங்ககினு,கபால்னு நோட்புக்கால்ல முகத்தை முடின்னு கடைக்குள்ளே புகுந்தோம்.நம்ம பசங்களுக்கு ஓரு கெட்ட பழக்கம் சரக்கு உள்ள போச்சுன்னா உடனோ வௌள்ளகாரன் ஆயிடுவானுகோ.
கரியன்ஓரு mug குடிச்ச உடன், த்தா காரோட்டி என்னடா கடைக்கு கூட்டியங்தா மப்பு ஏர்றால. இதை கேட்ட கள்ளு ஊத்தரவன் பானய நல்ல ஓரு கலக்கு கலக்கீ கள்ளு கொடுத்தான்.
அவ்வளவு தான், சும்மா போதை சர்ருன்னு ராக்கெட் கணக்ககா எறுச்சு. கரியன் சிலுவ போட்டு flat ஆய்டான். நானும் காரோட்டியும் ஓரறளவு ஓகே.
ஆனா புல் போதை.
புல் இங்லிஷ் தான், திடிரென்று காரோட்டி மச்சான் ஐ வான்ட் கால் லிட்டர் ஸ்டோன் “ I want kaal liter stone( translation for கள்)’ லந்து பண்ண ஆரம்பிச்சுடான்.அப்புறம் காலெஜ்க்கு ரிகஷா புடுச்சீ வந்து சேர்ந்து போதீ மரத்தடிலெ flat ஆனது தனி கதை