இப்பகுதியில் அனைத்தும் அலசப்படும்.இப்பதிவு அனைத்து 'பிளாக் பிரம்மாக்களூக்கு சமர்ப்பணம்' இப்படிக்கு உங்கள் செல்லம்.....'அப்பா டக்கர் அமீர்பர்'
Friday, 26 June 2009
கழக பொற்கால ஆட்சியில் புதியதாக 2000 ஆசிரியர் - அதன் தேர்விற்கான மாதிரி வினாத்தாள்
கழக பொற்கால ஆட்சியில் புதியதாக 2000 ஆசிரியர்கள் நியமிக்க போவதாக அறிவித்துள்ளார்கள். அதன் தேர்விற்கான மாதிரி வினாத்தாளினை தயாரித்துள்ளேன். இது தேர்விற்காக தங்களை தயார் செய்து கொள்ளுகின்றவாசகர்களூக்கு பேரூதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
பகுதி 1. கிழ்கண்டவற்றுக்கு சரியான விடையை (x) செய்க
தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் இவர்களில் யார்?
1. திரு.மு.க.ஸ்டாலின். 2. திரூ.கருணாநிதி. 3. திரு.மு.க.அழகிரி.
இந்தியாவின் பிரதம மந்திரி இவர்களில் யார் ?
1. திருமதி.சோனியா. 2.திரு.ராகுல். 3.திரு.மன்மோகன்சிங்.
சிறந்த காமடியன் இவர்களில் யார்?
1. எஸ்.வி.சேகர். 2.சுப்பிரமணியசாமி. 3.பொதுஜனம்.
புலிகளின் அழிவால்அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களில் யார்?
1.வைகோ 2.பழ.நெடுமாறன். 3.திருமாவளவன்.
சேது சமுத்திர திட்டம் எப்போழது முடிவுறும்.?
1.இவ்வருடம் 2. கி.பி.2100 3. ராமருக்கு தெரியும்
குழப்புவதில் சிறந்தவர் யார்.?
1.சோ 2.ரஜினி 3. ஞாநி
மதுரையை ஆட்சி புரிவது யார்
1.மீனாட்சி 2.அழகிரி 3.யாருமில்லை
எம்.ஜி.யாரின் வாரிசு இவர்களில் யார் ?
1. ஜெ 2.விஜயகாந்த 3.சத்தியராஜ்
பகுதி 2. கோடிட்ட இடத்தை நிரப்புக.
தமிழகத்தில் இது இலவசமாக__________கிடைக்காது.
1. கலர்டிவி 2.காஸ் அடுப்பு 3.கல்வி
கோடநாடு எஸ்டேட்_________உள்ளது.
1.ஐதராபாத்ல் 2.ஊட்டியில் 3.ஏற்காட்டில்
சமுகநிதி காத்த விராங்கனை என்ற பட்டம்____ல்____க்கு கொடுக்கபட்டது.
1.விரமணியா__ஜெ 2. கருணாநிதியா__கனிமொழி 3.ராமதாஸ்__குஷ்பு
பகுதி 3. சரியாக பொருத்துக
1. ஜெ 1. அன்னை
2. சோனியா 2. அம்மா
3. சசிக்லா 3 .புதுமைபெண்
4. கனிமொழி 4. சின்னமேடம்
1. கருணாநிதி 1. அய்யா
2. ராமதாஸ் 2. அய்யன்
3. பெரியார் 3. ஐயா
பகுதி 4. ஓரு பக்கம் மிகாமல் கட்டுரை வரைக
1. லட்சிய தி.மு.க, ச.ம.க. தே.தி.மு.க. கூட்டணி அமைத்தால் எப்படி இருக்கும் என்பதை பற்றி கட்டுரை வரைக.
2. சங்கம் வளர்த்த பாண்டியன்,சங்கமம் கனிமொழி இருவரையும் ஓப்பிட்டு கட்டுரை வரைக.
3. அ. காமாராஜ் ஆட்சி என்றால் என்ன
ஆ. அறிவு இயக்கம் என்றால் என்ன?
Subscribe to:
Posts (Atom)