Monday, 28 March 2011

பாமர காமராஜரிடம் படித்தவன் பட்ட அல்லல்

பாமர் காமராஜரிடம் படித்தவன் பட்ட அல்லல் .....தினமலரில் நான் இன்றய படித்த செய்தி இந்த ப்ளாக் ஐ எழுத தோன்றியது . நான் காமராஜரை குறை சொல்ல வில்லை ,அவர் நல்ல மனிதர் ஆனால் படிப்பு அறிவில்லாதவர். ஒரு சங்க கால புலவர் சொல்லி இருக்கார்


"கொடியது கல்லாதவன் கிழ் கற்றவன் பணி புரிவது " "


"காமராஜர் முதல்வராக இருந்த போது, சென்னையின் புறநகர்ப் பகுதிகளில், மேல்நாடுகளைப் போல் குட்டி நகரங்களை (சாட்டிலைட் சிட்டி) அமைக்க, நகர அபிவிருத்திக் கழக அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக ஒரு குழுவினர் வெளிநாடு சென்று, அங்குள்ள நகரமைப்பு முறைகளை பார்த்து வரலாம் என முடிவானது. இதற்கு துறை அமைச் சரும் ஒப்புதல் கொடுத்துவிட்டார்.அடுத்ததாய், முதல்வர் காமராஜர் ஒப்புதல் கொடுத்தால், விமானப் பயணம் போக அதிகாரிகள் தயாராய் இருந்தனர். இந்த நிலையில், ஒப்புதலுக்காக முதல்வர் காமராஜரிடம், கோப்பு சென்றது. அதைப் படித்துப் பார்த்தார் காமராஜர். "மக்கள் கொடுத்த வரிப் பணத்தில் இந்த உலகச் சுற்றுலா தேவை தானா' என்று அவருக்குள் கேள்வி எழுந்தது.இந்த சிந்தனையின் போது, அவரது மனதில் மதுரை நகரத்தின் வடிவமைப்பு தோன்றியது. மதுரையின் மையப் பகுதியில் மீனாட்சியம்மன் கோவில்; சுற்றிலும் தேரோடும் ரத வீதிகள்; அடுத்த சுற்றில் அளவெடுத்து வைத்தார் போல், நான்கு மாட வீதிகள்; அதற்கடுத்து வீதிகள்; இடையில் இவைகளை இணைக்கும் சாலைகள்."அந்தக் காலத்திலேயே, எவ்வளவு தொலைநோக்கோடு நம் முன்னோர் நகரை வடிவமைத்திருக்கின்றனர். இந்த அமைப்புக்கு மேல், நகரமைப்பு திட்டமிட என்ன இருக்கிறது' என்று நினைத்த காமராஜர், அதையே, கோப்பில் குறிப்பாக எழுதினார்."நகரமைப்புக்காக வெளிநாட்டு பயணம் தேவையில்லை. எக்காலத்திற்கும் ஏற்றார்போல் அமைக்கப்பட்டிருக்கும், நம் மதுரை நகருக்குச் சென்று, ஆய்வு செய்து வாருங்கள்' என்று குறிப்பெழுதி, வெளிநாட்டு பயணத்துக்கு தடைபோட்டு, மக்கள் வரிப்பணத்தை காத்தார் காமராஜர்."



ஒரு நகரை நிர்மாணிக்க " டவுன் ப்லான்னிங்" (TOWN PLANNING) அவசியம், சுதந்திரத்திற்கு பிறகு தொலை நோக்கு பார்வை இல்லாமல் நிர்மாணித்த சாலைகள்,நகர்கள் இன்று விரிவு படுத்த முடியாமல் இருக்கிறோம். காமராஜர் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் படித்த தொலை நோக்கு பார்வை கொண்ட ஒரு குழு ( அப்போதைய அரசு பணியாளர்களில் ஊழல் குறைவு )

அயல் நாடுகள் சென்று பார்வை இட்டு அங்குள்ள் வல்லுனர் களோடு கலந்து ஆலோசித்து அவர்களின் தொழில் நுட்பம் கொண்டு தமிழகத்தை நிர்மானிக்க காமராஜர் இடம் அனுமதி கோரியது


அதற்கு


காமராஜர் அரசு பணத்தை மிச்சம் பிடிக்கிறேன் என்று சொல்லி அவர்களை போகவிடாமல் தடுத்து விட்டார். அக்கால அதிகாரிகள் எடுத்து சொல்லி இருப்பார்கள், படிப்பு சுட்அறிவை கொடுக்கும் பட்டறிவு கொண்ட காமராஜர் புரிந்து கொள்ளாமல் அவர்களை மதுரைக்கு போக சொல்லி அசிங்க படுத்தி விட்டார் - அவர் அந்த அதிகாரிகளை டெல்லி காவது அனுப்பி ஷஹ்ஜஹான் (shahjahan) நிர்மாணித்த நகரை பார்க்க சொல்லி இருக்க வேண்டும் .

அதனால் நஷ்டம் அவருக்கு அல்ல நம் நாட்டுக்கு

Sunday, 3 October 2010

யந்திரனும் மடதமிழ்யனும்

யந்திரனும் மடதமிழ்யனும்

யாராவது இந்த தலைப்பில் ப்ளாக் ஏழுதுங்கள் அல்லது பின்னூட்டம் எழுதுங்கள் ப்ளீஸ்

Thursday, 3 June 2010

ஒரு பிராமணப்பெண் பத்து பிராமணரல்லாத கணவர்களை( அதர்வ வேதம் காண்டம் 5)

ஒரு பிராமணப்பெண் பத்து பிராமணரல்லாத கணவர்களை
முன்னம் கொண்டிருந்தாலும்
ஒரு பிராமணன் அவள் கரம்பிடிக்க
அவனே அவள் புருடனாவான்
அரசனுக்கும் வைசியனுக்கும் அப்படி ஆவதில்லை

ஐந்துவித மனிதர்க்குச்சூரியனே
அறிவித்தச் செய்தி இது
பிராமண மனைவியை
தேவர் மனிதர் அரசர் திருப்பி அளிப்பார்கள்
அளிக்க அறிவில்லா அரசனுக்கு ஆயிரம் அள்ளித்தரும்
அந்தப்புறச்சுந்தரிகள் ஏது
மாடுகள் கன்று ஈவது ஏது
உணவு படைக்க பொன்மாலை அணிந்த பணியாளேது
தேர் இழுக்கும் கருஞ்செவியுடை வெண்குதிரை
நோய் தீர்வதேது
ராசாங்கத்தில் தாமரைத்தடாகமொடு அல்லிக்குளமேது
அழகுப்பசுவின் பால் கறக்க ஆளேது
மனைவியில்லா பிராமணன்
உறங்கும் வீட்டில்
பசு சினைப்பிடிப்பதில்லை
காளையும் நுகத்தடி சுமப்பதில்லை
மானுடத்தலைவனே
பிராமணப்பசுவைப்புசிக்க விரும்பாதே
நஞ்சு நிறைந்தது துனபம் தருவது அது
பிராமணனை ச்சாது என நினைத்து
அவன் செல்வம் கொள்வோன்
மண்ணாலும் விண்ணாலும் வெறுக்கப்படுவான்

பிராமனன் நாக்கு வில்லாகும்
சொல் அம்பின் கழுத்தாகும்
அவன் கோபத்தால் தூரமிருந்தே
எதிரியை அழிப்பவன்
தேவனுக்கு உறவான பிராமணனை இம்சிப்போன்
பிதுர் உலகம் செல்வதில்லை
பிராமணனின் மீது கோழை உமிழ்வோர்
மயிர்ப் புசித்து ரத்த ஆறு அமர்வர்
பிராமணனை இம்சிக்கும்
தேசம் பாழாகும்
படகொன்றை சிறு ஒட்டை மூழ்கடிப்பதுபோலே
ராச்சியம் மொத்தமாய் அழிந்துபோம்
நாரத முனியே பிராமணனின் பொருளை
அபகரிப்போனுக்கு விருட்சங்கள் நிழல் தராது
முரசு கர்ச்சிக்கட்டும்
எதிரிகள் கலங்கட்டும்
அவர்தம் கருத்துக்கள் குழம்பட்டும்
சுரம் எனும் நோய் தூரஞ்செல்க
( அதர்வ வேதம் காண்டம் 5)


இது எப்படி இருக்கு..

Tuesday, 1 June 2010

DREAM STAR" உதயநிதி ஸ்டாலின்


( படத்தின் மீது கிளிக் செய்யவும் )

Monday, 11 January 2010

சிவாஜி அண்ட் கமல் ஓவர் அக்டிங் நடிகர்களா

சிவாஜியையும், கமலையும் நம்மவங்க நீங்க நல்ல நடிகிறிங்க உலக சிறந்த நடிகர்கள் நீங்க தான் என்று உசுபிப்ஏற்றி விட்டு அவர்களை கஷ்டபடுத்தி நடிக்க வைத்த மக்க'ஸ். அதனால் அவர்கள் பல படங்களில் பயங்கரமாக நடித்து எப்படி எல்லாம் நம்மை கஷ்டத்திற்கு உள்ளாக்கியுள்ளார்கள் என்பதை உணர்து இருகிற்கள.

மறைந்த செவலேய சிவாஜி படத்தை இளசுகளே யாராவது தியேட்டரில் அல்லது டிவீ டி -லே பார்த்து இருகிர்களா, சமிபத்தில் சுமதி என் சுந்தரி என்ற பழயை சிவாஜி படத்தை பார்தேன், கொடுமையடா சுவாமி. ஒரு குண்டு சிவாஜி மற்றொரு சிவாஜி மீது உட்காருந்து கொண்டு பாட்டு பாடி, யப்பா சகிக்லே. அப்பா சிவாஜி போன்-லே "சுமதி என்று அழுதார் பாருங்கோ" சம காமெடி சிரி சிரி என்று சிரித்து எனக்கு தலைவலி வந்திருச்சி (என் நைனா கோவப்பட்டு என் பின்னந்தலைலே பட்டேன்று அடிச்சிட்டார்.) கொடுமையடா சுவாமி, அந்த காலத்தில் படம் 100 நாட்கள் ஓடிடுச்சாம். .

எனக்கு தெரிஞ்சு சிவாஜி அருமையாக நடித்த படம் பாரதிராஜா வின் முதல் மரியாதை. எதோ பூத்தகத்தில் படித்ததாக ஞாபகம் சிவாஜியே கேட்டராம் ஏன்டா இந்த படத்தில் நான் நடித்த மாதிரி தோணலே அதற்கு பாரதிராஜா படம் முடிஞ்ச பிறகு தியேட்டர் லே படம் பார்த்து விட்டு பிறகு சொல்லுங்கள் அண்ணா என்றாராம். படத்தை பார்த்த சிவாஜி எனக்கு உன்ன மாதிரி டைரக்டர் அந்த காலத்தில் கிடைக்கவில்லை என்று சொன்னாராம்?? .
கமல் விசயத்திற்கு வருவோம் கமல் சிவாஜி மாதரி கன்னா பின்னா வென்று நடிக்க ஆரம்பித்து விட்டார். பல விதமான முகமுடிகள் போட்டு கொண்டு நடிக்கிறார், எனக்கு எனவோ எதிர் கால இளசுகள் "கமலின் தசாவதாரத்தை பார்த்துவிட்டு கொடுமையடா சுவாமி என்று சொல்லி சிரிப்பார்கள் என தோன்றுகிறது. வேட்டையாடு விளையாடு படத்தில் ஆர்பாட்டம் இல்லாமல் கமலின் நடிப்பைதான் சிறந்த நடிப்பாக எனக்கு சொல்ல தோன்றுகிறது சமிபத்தில் வந்த உன்னை போல் ஒருவன் படத்தில் கமல் சாமானியனாக நடிக்க ரொம்ப கஷ்டபடுகிறார் கேரக்டரோடு அவர் ஒட்டவே இல்லை (உதாரணம் - சிந்து பைரவி யில் சுகாசினி நடிப்பு).
உலக நாயகன் கமலை ஞானி என்று துதி பாடும் கமலடியர்களே, கமலிடம் சொல்லுங்கள் " நீங்கள் போட்டு கொண்ட வட்டத்தில் இருந்து வெளிய வாருங்கள் " ஆஸ்கார் இல்லை அதற்கு மேல் எதாவது விருது இருந்தால் அதுவும் உங்களுக்கு கிடைக்கும் இல்லையனில் எதிர்கால இளசுகள் உங்க படத்தை பார்த்துவிட்டு கொடுமையடா சுவாமி என்று கமெண்ட் அடிப்பார்கள்

Friday, 20 November 2009

தமிழினத்தலைவன் தேசியத்தலைவனானதால் வந்த வினை ?



எமது தலைவன் மாறிவிட்டான்,அவனை மாற்றியது காலமா இல்லை காங்கிரஸா, அதை பற்றி நான் இங்கு எழுத போவதில்லை. துக்ளக் சோ, ஜெ இவர்கள் எல்லாம் விடுதலைபுலிகளை பயங்கரவாத இயக்கம் என குற்றம் சாட்டிய போது அவர்களை எதிர்த்து எம் தலைவன் இட்ட அறிக்கைகள் எராளம். இன்றோ இலங்கை தமிழனின் இன்றைய இழிநிலைக்கு காரணம் பிரபாகரனும் அவனின் விடுதலைபுலிகளின் இயக்கமே என்பதை தெள்ள தெளிவாக, சமநிலையோடு ஆய்வு செய்து அறிவித்து விட்டான்.

எம் தலைவன் ஈழ தமிழனின் துயர் துடைக்க அறப்போராட்டங்களான சாலைமறியல்,ரயில் மறியல்,பந்த் போன்றவற்றை நடத்தியுள்ளான் ஆனால் அவற்றை மெச்ச யாருமில்லை. ‘டெசோ’ என்ற இயக்கத்தை உருவாக்கி, அதில் அனைத்து போராளி குழுக்களை இணைத்து அதற்கு தலைமையேற்று, ஈழ தமிழனின் வாழ்வு மலர அரும்பாடு பட்டபோது, வெண்ணைய் திரண்டு வரும்போழ்து தாழி உடைந்த கதையாக பிரபாகரனும் அவனின் விடுதலைபுலிகளின் இயக்கம், சக போராளி குழுக்களை அழித்து இலங்கை அரசுக்கு மறைமுகமாக பேருதவி செய்தது. இதை எம் தலைவன் குறிப்பிட்ட போது நெடுமாறன் போன்ற புல்ருவிகள் கூக்குரலிடுகின்றனர்.


அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி, இலங்கைக்கு இந்திய அமைதி படையினை அனுப்பி ஈழ தமிழனை வதைத்த போது அவன் செய்த ஆர்பாட்டங்களை சொல்லி மாளாது. புலிகளுக்கும், இந்திய படைக்கும் போர் முண்ட போது தமிழன் என்ற உணர்வினால் புலிகளை ஆதரித்தான். அதே புலிகள், தமிழக மண்ணில் ராஜிவ் காந்தியை படுகொலை செய்த போது எமது தலைவன் தான் முதலில் ஓரு இந்தியன் பின்னர் தமிழன் என்பதனை உணர்ந்தான்.


தன்னை கொல்ல சதி நடக்கிறது என்றும் அதன் காரணமாக வைகோ-வை கட்சியிலிருந்து நீக்கினான் ( பின்னர் கூட்டணியில் சேர்த்தது வேறு விஷயம் ). இது எம் தலைவனுக்கு புலிகளின் மேலிருந்த அபிமானத்தை மாற்றியது, இதை நிங்களும் ஆமோதித்தால் நான் அதற்கு உடன் படுகிறேன்??!!

ஜனநாயகம் என்றால் என்னவன்று கேட்கும் புலிகளுக்கு, தமது கட்சியில் ஜனநாயகம் எப்படி செயல்படுகிறது என்பதை உதாரணத்தோடு விளக்கியதை யாரும் மறக்க முடியாது. ஓரு நிரூபர் தங்கள் மகனை கட்சியில் உங்கள் வாரிசாக நியமிக்க போவதாக பேச்சு அடிபடுகிறதே என்று கேட்க, அதற்கு எம் தலைவன், ‘ தி.மு.க என்ன காஞ்சி சங்கர மடமா வாரிசினை நியமிக்க என கோபபட்டான்’ ஆனால் இன்றோ, தன் மகனை துணை முதல்வராக்கி அழகு பார்கின்றான் இது வேறு கதை.

மாத்தையா, அன்பழகன் போன்று எம் தலைவனுக்கு கட்டு பட்டவன் இல்லை, இதை அறியாத எம் தலைவன், பிரபாகரன் தனக்கு தெரிந்த ஜனநாயக முறைபடி மாத்தையா மற்றும் ஏனைய தலைவர்களின் கதையை முடித்ததை குறை கூறுவதை பிறர் ஏற்காமல் நகைப்பது அழகல்ல.

பிரபாகரனின் சர்வாதிகார போக்கினால் புலிகளின் இயக்கத்தில் பிளவு ஏற்கபட்டது, இதை பயன்படுத்தி இலங்கை அரசு புலிகளை இந்திய அரசின் உதவியுடன் அழித்தது. பிரபாகரன் தான் அழிந்தது மாத்திரம் அல்லாது இலங்கை தமிழனின் வாழ்க்கையினையும் சேர்த்து அழித்ததை யாரலும் மறுக்க முடியாது.

அன்று பிரபாகரனிடமிருந்து கற்ற பாடத்தினால் எம் தமிழினத்தலைவன் இன்று அடிமைபட்டு, சிறுமைபட்டு கிடக்கும் ஈழ தமிழனின் இழி நிலையினை கண்டு மவுனமாக தனக்குள் அழுகின்றான். உலக தமிழினமே உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் எம் தலைவனின் மன வலியினை இலங்கை தமிழனின் வாழ்க்கை போன்று கேலிக்குரியதாக்காதிகர்கள்.

Thursday, 27 August 2009

இவன் வெள்ளக்காரியை இழுத்துக்கினு வந்திடுவான் பாரு.

..



இது தெரு முனையிலே பசங்களோட நின்னுகின்னு திருட்டு தம்மடிக்குது பாரு,எங்கே உருப்பட போகுது- நம்ப காதுபட தெரு பெருசுங்க பேசிச்சுங்கபா











நான் பாஸ் மெரிட்ல அதுவும் கோல்ட் மெடல் என்றவுடன் பெருசுங்க நம்ப முடியாமல், ‘இது பிட் அடித்து பாஸ் ஆயிருக்கும்’ என்று தங்களை தாங்களே தேத்தி கொண்டதுங்கப்பா



.......அதே பெருசுங்க எனக்கு படித்து முடித்தவுடனே கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி வேலை கிடைத்தவுடனே, ‘அவனுக்கு அதிர்ஷ்டம்’என பெருமுச்சுவிட்டதுங்ப்பா.


இதே பெருசுங்க, என்னப்பா எப்போ வெளிநாடு போக போறே என கேட்டுச்சுங்கப்பா, TRY பண்ணி கொண்டிருக்கேன் என்று சொன்னவுடன்,இவனுக்கல்லாம் வெளிநாட்டு வேலை எங்கே கிடைக்க போறது என்று என் முதுகு பின்னால் முணுமுணுக்குதுங்கப்பா.


திரும்பவும் இதே பெருசுங்க,எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தவுடன், ‘வெளிநாடு போறான் இவன்’ அங்கிருந்து ஓரு ‘வெள்ளக்காரியை இழுத்துக்கினு வந்திடுவான் பாரு’ என சொல்லுதுங்கப்பா

இந்த மாதிரி பெருசுங்களை என்ன செய்வது, எனக்கு ஓன்னுமே புரியல்லைப்பா, உங்களூக்காவது எதாவது தோணுதா.