Tuesday, 19 June 2007

தண்ணிர்ல தேசம்.

தண்ணிர்ல தேசம்.

நான் 10+2 படிக்கிறேன் மழையில்லாமல் கிணறு எல்லாம் தண்ணியில்லாமல் வத்திடிச்சு......

பணம் இருக்காவா எல்லாம் BORE WELL போட்டுண்டா,சும்மா தண்ணியை சர் சர்-ன்னு மோட்டார் போட்டு ஊறிஞ்சு எடுத்து பித்திக்கிறா, எங்க வூட்ல 100 அடிலா தண்ணி வந்டிச்சு ஆனாலும் நாங்கோ 150 அடிக்கு BORE போட்டோம்,அப்படிங்களா நாங்கோ 75 அடிக்கு போட்டோம் சும்மா தண்ணி இளநி கண்க்கா இருக்கு -ன்னு.

BORE போடுவது பெரிய BUSINESS ஆயிடிச்சு,நாலஞ்சு பேர் partnership-லே BORE போடுற MACHINE வாங்கி போட்டு லட்சாதிபதி ஆய்ட்டாங்கா, துட்டு இருக்கிற ஜனங்க எல்லாம் அட்வான்சு தந்திட்டு எப்படா நாமும் பித்திக்கிறது என்று துக்கபட்டு வ.வூ.சங்கம் (வருத்தபடுகிற வூட்டுகாரர் சங்கம்) ஆரம்பிச்சிட்டா.

இப்படி ஊரே தண்ணியிலாமல் தள்ளாட்டம் போட்டு கொண்டு இருக்காங்கா,ஏழை நடுத்தர மக்கள் என்ன பண்ணுவாங்க சாமியோவ்?????.
இவர்களுக்கு உதவிட ஆரசாங்கமும் சில தனிபட்ட மனுசாலும் முன் வந்தாங்கா.

Muncipality லாரி MLA வசிக்கிற ஏரியாக்கும்,வட்டம்,மாவட்டம் க்குற ஏரியாவுக்கும் தண்ணி உட்ச்சு நைனா. அப்புறம் என்னா 'தண்ணி கலகம்' வந்திடிச்சி, குடிசைவாசிகள் எல்லாம் காலி குடத்தோடு தண்ணி லாரியை அட்டாக் பண்ணி தண்ணிய புடுச்சுகின்னாங்க.

TVS 50யும்,100CC யும் வச்சின்னுக்கிற மத்திய நடுத்தர வர்க்கம் என்ன செய்யும் தலிவா, இந்து PAPER-ஐ படிச்சிட்டு இங்கிலிஷ்காரனுக்கு இங்கிலிஷ் கத்து குடுக்கிற party கள் ஆச்சே இன்னா பண்ணும். இவாளுக்கு எல்லாம் உதவிட ஆபத்தாண்டவர்கள் புறப்பட்டார்கள்.

விட்டில் BORE உள்ள சில நல்ல உள்ளங்கள் தண்ணிரை ஓரு குடம் 25 நயா பைசாக்கள் என்று விற்று எம் போன்றவர்கள் வயிற்றில் 'தண்ணிர் வாற்றார்கள்'. அதனால் நான் தண்ணி அடிக்க ஆரம்பிச்சேன்,நிங்க வேற தப்பா நினைக்காத மக்கா,நானும் சைக்கிளில் குடம் கட்டி விட்டிற்க்கு தண்ணி எடுத்து வர ஆரம்பிச்சேன்.

இப்படி தண்ணியும் குடமுமாக இருந்த என் நெலமை, என் மாமாவினால் 'THE POLICE STORY' ஆச்சு..........(அடுத்த பதிவில் சொல்றேன் குட்டிஸ்.....டாம் டும் டக்கா)

Saturday, 9 June 2007

ஜகத்குரு யார் - சங்காரச்சாரியா,இயேசுவா,முகம்மதுவா ?

குரு சங்காரச்சாரியார்- ஆசியர்.

இவர் நாத்திகவாதிகளான புத்தர்,ஜெயினர்களின் கொள்கைகளை முடிவுக்கு கொண்டு வந்தவர். உருவமற்ற கடவுளை சிவனை வழிபட்டவர், பெரும்பான்மையான இந்திய மக்களை கடவுளின்பால் திருப்பியவர். இவர் கொள்கைகள், ஏன் உலகம் அனைத்தும் பரவவில்லை.



ராப்பாய் இயேசு - ஆசியர்


இவர் கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாக இருந்த காலத்தில் அதை கண்டு சினந்து எழுந்தவர். இவர் தன்னுடைய இனத்தை தன் கொள்கையினால் மற்ற முயன்று தோற்றவர். உருவமற்ற கடவுளுக்காக அகோர மரணம் அடைந்தவர். இன்று பெரும்பான்மையான உலக மக்கள் இவரின் கொள்கைக்கு பின்னால்.




நபி முகம்மது - ஆசியர்


இவர் மனிதனை மனிதன் கடவுளாக வழிப்படும் இழி நிலையை கண்டு வெகுண்டு எழுந்தவர். உருவமற்ற கடவுள் வழிபாட்டை மீண்டும் நிலைநாட்டியவர். இவரின் கொள்கைகள் இன்று உலகம் அனைத்தும் பரவியுள்ளது.



மறுமலர்ச்சியாளர்களான இம்முவருள்
ஜகத்குரு யார் ?????????????????