Thursday, 27 August 2009

இவன் வெள்ளக்காரியை இழுத்துக்கினு வந்திடுவான் பாரு.

..



இது தெரு முனையிலே பசங்களோட நின்னுகின்னு திருட்டு தம்மடிக்குது பாரு,எங்கே உருப்பட போகுது- நம்ப காதுபட தெரு பெருசுங்க பேசிச்சுங்கபா











நான் பாஸ் மெரிட்ல அதுவும் கோல்ட் மெடல் என்றவுடன் பெருசுங்க நம்ப முடியாமல், ‘இது பிட் அடித்து பாஸ் ஆயிருக்கும்’ என்று தங்களை தாங்களே தேத்தி கொண்டதுங்கப்பா



.......அதே பெருசுங்க எனக்கு படித்து முடித்தவுடனே கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி வேலை கிடைத்தவுடனே, ‘அவனுக்கு அதிர்ஷ்டம்’என பெருமுச்சுவிட்டதுங்ப்பா.


இதே பெருசுங்க, என்னப்பா எப்போ வெளிநாடு போக போறே என கேட்டுச்சுங்கப்பா, TRY பண்ணி கொண்டிருக்கேன் என்று சொன்னவுடன்,இவனுக்கல்லாம் வெளிநாட்டு வேலை எங்கே கிடைக்க போறது என்று என் முதுகு பின்னால் முணுமுணுக்குதுங்கப்பா.


திரும்பவும் இதே பெருசுங்க,எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தவுடன், ‘வெளிநாடு போறான் இவன்’ அங்கிருந்து ஓரு ‘வெள்ளக்காரியை இழுத்துக்கினு வந்திடுவான் பாரு’ என சொல்லுதுங்கப்பா

இந்த மாதிரி பெருசுங்களை என்ன செய்வது, எனக்கு ஓன்னுமே புரியல்லைப்பா, உங்களூக்காவது எதாவது தோணுதா.

Wednesday, 26 August 2009

சமஸ்கிரூதம் பிரமணர்களின் மொழியல்ல ?




  • இது அப்பா டக்கரின் கண்டுபிடிப்பல்ல
    அனனவருக்கும் தெரிந்தது தான். இதை நான் ஏன் சொல்ல வருகிறேன் என்றால் நம்மில் பலர் (சில பதிவர்களும்) சமஸ்கிரூதம் கற்றதினால் தாம் மற்றவர்களை விட மேலானவர்கள் என நினனக்கிறார்கள்.


பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஓர் இனத்தினரால் பேசபட்ட மொழி சமஸ்கிரூதம். வியாசர், வால்மிகி,காளிதாசன் ஆகியோர் பிரமணர்கள் அல்ல ஆனால் அவர்கள் சமஸ்கிரூதத்தில் பேசி மற்றும் எழுதியுள்ளனர். ஏன் இராமர்,கிருஷ்ணர், பாண்டவார்கள்,பிஷ்மர்,கர்ணனை வளர்த்த தேரோட்டி வரை சமஸ்கிரூதத்தில் பேசியதாக அறிகிறோம்.




  • தற்கால பிரமணர்கள் சமஸ்கிரூதத்தை தேவமொழி, பிரமணமொழி என்று ஏன் சொல்லுகிறார்கள் என புரியவில்லை.கோவிலில்,கல்யாணத்தில், சமஸ்கிரூத மந்திரம் சொல்லும் பிரமணனுக்கு அம்தமந்திரத்தின் பொருளும், சரியான உச்சரிப்பும் தெரியவில்லை என்பதே உண்மை.



எனது பிரமண நன்பனின் விட்டிற்க்கு ஓரு நாள் சென்றேன் அப்போது அவனின் தந்தை ஏதொ ஓரு சமஸ்கிரூத புத்தகத்தை விரித்து படித்து கொண்டு இரூந்தார். என்னை பார்த்து ‘ வாப்பா எப்படி இருக்கே’ என குசலம் விசாரித்தார். நானும் நல்ல இருக்கேன் மாமா, என்ன படிக்கிறிங்க என கேட்டேன். அதற்கு அவர் சாம வேதம்டா, இதை படித்தால் மனம்,புத்தி தெளிவாகும்,கெட்டது எதுவும் அண்டாது என்றார். மாமா, அர்த்தம் தெரிந்து தான் வேதம் படிக்கிறிர்களா என கேட்டேன்,டென்ஷன் ஆகிவிட்டார்...




  • பிறமொழி எழுத்துக்களை கொண்டூ தான் சமஸ்கிரூத வார்த்தைகளை படிக்க முடியும், அதனால் பிரமணர்கள் அதை தப்பாக உச்சரித்தாலும் நாம் அதை பற்றி கவலை படுவதில்லை. அதே சமயம் ஆங்கிலத்தை யாராவது தப்பாக உச்சரித்தால் மிக்க வேதனை படுகிறோம்.சமஸ்கிரூத மந்திரத்தை உயர்சாதியினர் அல்லதேரர் கேட்டால் அவர்களை அக்குவேறு,ஆணிவேறாக பியக்க சொல்லுகிறது ஓரு வேதம். இதற்கான அர்த்தம், அக்கால தாழ்குலத்தினருக்கு சமஸ்கிரூதம் புரியும் அல்லது சமஸ்கிரூத மொழியில் அவர்களும் பேசினார்கள் என தான் எடுத்து கொள்ள வேண்டியிருக்கிறது.


சமஸ்கிரூதம் பலதரபட்ட மக்களால் பேசப்பட்ட மொழியே அன்றி பிரமணர்களின் அல்லது ஏனைய உயர்சாதியினரின் அல்லது தேவர்களின் மொழி அல்ல தமிழ், ஆங்கிலம் போல் அதுவும் ஓன்று. எப்படி ஆங்கிலம் நம்மிடையே உட்புகுந்து தமிழை மெல்ல ஓரம் கட்டுகிறதோ அதே போன்று பிறமொழி ஆதிகத்தினால் சமஸ்கிரூதம் அழிந்து தற்போது கடவுளின் உருவச்சிலை முன்னால் உச்சரிக்கும் மொழியாகிவிட்டது.




  • தி.க.வினர் தான் சமஸ்கிரூதத்தை பிரமணர்களின் மொழியாக்கியது அதை பிரமணர்களூம் விடபிடியாக பிடித்து கொண்டு விட்டனர்.