Friday, 22 May 2009

அருகி போன சித்தாந்தங்கள் - இராமானுசர் & சங்கரர்.(1)

மக்களிடையே குழப்பமும்,தெளிவின்மையும் இருக்கும் பொழுதும்,அராஜகம் தலைவிரித்து ஆடும் பொழூதும் புரட்சிகரமான கருத்துக்களை சொல்லி விழிப்புணர்வை எற்படுத்துவர்கள் அரசியல் எனில் தலைவராகிறர்கள், சமயம் எனில் குரு ஆகிறார்கள்.

சிலரின் தத்துவங்கள் அதன் நடைமுறைகள் காலபோக்கில் பின்பற்றுபவர்கள் இல்லாமல் சுவடழிந்து போகிறது அச்சிலரின் தத்துவங்களையும், நடைமுறைகளையும் நாளிடைவையில் அதனை பின்பற்றுபவர்கள் பலர் அதில் உள்ள கடுமையான சட்டதிட்டங்களால் கைவிடுகிறார்கள். அதனால் அத்சித்தாந்தங்களூம் அதனை பின்பற்றுபவர்களும் அருகி போகிறார்கள்.

சங்கரர் வகுத்த பாதையை திருநிறு அணிந்த பார்பனனும், இராமானுசர் வகுத்த பாதையை நாமம் அணிந்த பார்பனனும்,அவரால் அரவணைத்து பட்ட சில உயர் சாதியீனரும் தற்போது பின்பற்றுகிறார்கள், பஞ்சமர்கள் தற்போது எனக்கு தெரிந்து இல்லை.

இந்திய துணைக்கண்டம் பல சிற்றரசுகளூம்,பேரசுகளூம் உள்ளடக்கிய நாடாக இருந்தது. சங்கரர் இமயமலை வரை உள்ள பல்வேறு நாடுகளூக்கு சென்று பல குருக்களை வாதிட்டு வென்று,மடங்களை ஸ்தாபித்து அத்வைத நெறியை பரப்பியதால் அவரை திருநிறு அணிந்த பார்பனர்கள் ஜெகத்குரு என போற்றி வணங்குகிறார்கள்.
இராமானுசர் வடக்குவரை சென்றார் ஆனால் ஏனோ சங்கரர் அளவிற்க்கு செயல்படவில்லை. அதனால் நாமம் அணிந்த பார்பனனும்,அவரால் அரவணைத்து பட்ட சில உயர் சாதியீனரும் அவரை ஜெகத்குரு என அழைக்கவில்லை.
இவர்களின் சித்தாந்தங்கள் ஏன் கால போக்கில் அருகின? ஏன் இவ்நவின உலகில் தற்சமயம் சிலரால் மட்டும் போற்றபடுகின்றன.....(தொடரும்)...

No comments: