Monday, 18 August 2008

கடவுளின் மொழி எது ? அரபி,சமஸ்கிருதம்,இப்ரு?


கடவுளின் மொழி எது ? அரபி, சமஸ்கிருதம், இப்ரு?


இந்துக்கள் சமஸ்கிருதம் என்று சொல்லி, கோவிலில் கடவுளின் உருவ சிலை முன் ஓலிக்கின்றனர்.


இஸ்லாமியர்கள் 'அரபிக்கில்' ஓதுகீறார்கள்.


கிருஸ்துவர்கள் 'கதவை தாழ் போட்டு கொண்டு இருட்டில், விநோத ஓலி எழுப்பி பேசுகின்றனர்.


எனக்கு கடவுளிடம் என்ன மொழியில் பிரத்திப்பது என்று தெரியவில்லை....... உங்களூக்கு தெரியுமா........................................கடவுளின் மொழி எது என்று..

8 comments:

உண்மை அடியான் said...

//கிருஸ்துவர்கள் 'கதவை தாழ் போட்டு கொண்டு இருட்டில், விநோத ஓலி எழுப்பி பேசுகின்றனர்.//


நீங்கள் பார்த்தீர்களா?இருட்டில் வினோத ஒலி எழுப்புவதை.

கிறிஸ்தவம் எந்த மொழியையும் சார்தது அல்ல.கடவுள் அவனவனுடைய தாய் மொழியிலேயே பேசக்கூடியவர்.

அதனால் தான் உலகில் மற்ற எந்த புனிதப்புத்தகங்களையும்விட அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் புத்தகமாக பைபிள் உள்ளது.

அப்துல் குத்தூஸ் said...

கடவுளின் மொழி எது ? அரபி, சமஸ்கிருதம், இப்ரு?

அண்ட சராசரத்தில் உள்ள அனைத்திற்கும் சொந்தக்காரன்தான் கடவுள். மொழிகள் அனைத்தும் அவன் புறத்திலிருந்து வந்ததுதான். அதற்கு எந்த மனித இனமும் சொந்தம் கொண்டாட முடியாது. அனைத்து மனிதனுக்குமான பொது மொழி இவ்வுலகத்தில் பயன்பாட்டில் இல்லை. அதற்காகத்தான் கடவுள் மனிதன் அறிந்த மொழியிலேயே தனது கருத்தை விளக்குகின்றான். கடவுளின் கருத்துக்கள் அனைத்து மனித இனத்திற்கும் போய் சேர வேண்டும் என்பதே கடவுளின் குறிக்கோள். மொழி ஒரு முக்கியமானதே அல்ல. மொழி ஒரு தொடர்பு ஏற்படுத்தும் சாதனம். மனிதர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதற்கு தேடிய காரணங்களில் மொழியும் ஒன்று.

அப்துல் குத்தூஸ்.

Unknown said...

வாய் பேசாதவன் மொழியையும் கடவுள் அறிவார். உங்களுக்குத் தெரிந்த மொழியில் பிரார்த்திக்கலாம். கடவுளுக்கு மொழி ஒரு தடையில்லை.

ஜோ/Joe said...

//கிருஸ்துவர்கள் 'கதவை தாழ் போட்டு கொண்டு இருட்டில், விநோத ஓலி எழுப்பி பேசுகின்றனர்.//

???????

அரபுத்தமிழன் said...

எப்படி மனித சமுதாயத்திற்கு மூலம்
ஆதி மனிதன் 'ஆதாம்' உண்டோ அது போல எல்லா மொழிக்கும் ஒரு மூல மொழி உண்டு
(கணிணியில் machine code இல்லையா அது போல).

நமக்கே நாலைந்து மொழிகள் தெரியும் போது நம்மைப் படைத்தவனுக்கு அனைத்து மொழிகளும் தெரியாதா என்ன ?

- அப்துல்லாஹ்

Anonymous said...

கடவுளுக்கு எல்லா மொழிகளும் தெரியும். ஏன் நீங்கள் மனதில் நினைப்பது கூடத் தெரியும்.

ஜோசப் பால்ராஜ் said...

கடவுளின் மொழி மவுனம் தான்.

அப்பா டக்கர் அமீர்பர் said...

PENTECOST SECT - THEY LOCK THE DOORS AND IN THE DARK,THEY MAKE SOME SOUND FOR SOMETIME...AT THE END THE PRIEST SAYS,O HOW HAPPY ARE WE,we spoke to the god....
i attended the pentecost church once and i asked about this mate, my friend who took me to pentecost church,'it is a language to speak to god';ASK YOUR PENTECOST FRIEND MR. TRUTH.....